/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் வெள்ளம்; அத்துமீறலால் அபாயம்; அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
/
ஆற்றில் வெள்ளம்; அத்துமீறலால் அபாயம்; அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
ஆற்றில் வெள்ளம்; அத்துமீறலால் அபாயம்; அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
ஆற்றில் வெள்ளம்; அத்துமீறலால் அபாயம்; அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
ADDED : ஜூலை 25, 2025 08:55 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆழியாறு ஆற்றில் விதிமுறை மீறி சுற்றுலா பயணியர் செல்வதை தடுக்க, போலீசார், நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனம்,கேரளாவுக்கு ஒப்பந்தப்படி வழங்கப்படும்நீர், ஆறு வழியாக செல்கிறது.ஆழியாறு ஆறு, ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி என பல கிராமங்கள் வழியாக பயணித்து கேரள மாநிலத்துக்குள் செல்கிறது.
தற்போது, ஆழியாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய சூழலில், உபரிநீர் திறக்கப்படுகிறது. இதனால், ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஆபத்தை உணராமல் ஆனைமலை அருகே ஆற்றில் குளிக்கவும், போட்டோ எடுக்கவும் சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அணையில் திறக்கப்படும் நீர், ஆறு வழியாக செல்வதை காணும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் ஆர்வமிகுதியில் ஆற்றில் குளிக்கின்றனர். ஆழியாறு, ஆனைமலை தடுப்பணையிலும், அம்பராம்பாளயைத்தில் ஆற்றிலும் குளிக்கும் சுற்றுலா பயணியர், ஆபத்து அறியாமல் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்குவதால் அசம்பாவிதம் ஏற்படுகிறது.
தற்போது அணை முழு கொள்ளளவை எட்டிய சூழலில், நீர் வரத்துக்கேற்ப ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இதனால், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இச்சூழலில் ஆபத்தை உணராமல், சுற்றுலாப்பயணியர் செல்கின்றனர்.
ஆழம் தெரியாமல் குளிப்பதால் வீண் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போலீசார், நீர்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.