/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை துறை கட்டடத்தில் 'மாடித்தோட்டம்'; பெரியநாயக்கன்பாளையத்தில் நடக்குது இந்த கூத்து

ADDED : ஜன 02, 2025 05:48 AM

பெ.நா.பாளையம்; பராமரிப்பு இல்லாத பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறை அலுவலகத்தின் மாடியில் செடிகள் முளைத்து 'மாடி தோட்டமாக' காட்சியளிக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் வீரபாண்டி, சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை உட்பட்ட பகுதிகளில் தோட்டக்கலை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான தோட்டக்கலைத் துறை கட்டடம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளது.
இந்த அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால், போதுமான பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தின் மேல் பகுதியில் செடிகள் வளர்ந்து மாடித்தோட்டம் போல காணப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,' தமிழக அரசின் தோட்டக்கலை துறை, மாடி தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி செடிகள், உரங்கள், பைகள் வழங்குகின்றன. ஆனால், தோட்டக்கலை துறை அலுவலகம் உள்ள கட்டடத்தில் யாருக்கும் எவ்வித மானியமும் வழங்காமல் மாடி தோட்டம் வளர்ந்து நிற்கிறது. ஏற்கனவே பழுதாகி உள்ள தோட்டக்கலை துறை கட்டடத்தின் மேற்கூரையில் இது போன்ற செடிகள் வளர்ந்து நிற்பது கட்டடத்தை மேலும் பழுதடைய செய்து, கட்டடம் இடிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அகற்றி, அவ்விடத்தில் புதிய அலுவலகம் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.