/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல் போன்களை பறித்த கைகளுக்கு மாவு கட்டு 'பரிசு'
/
மொபைல் போன்களை பறித்த கைகளுக்கு மாவு கட்டு 'பரிசு'
மொபைல் போன்களை பறித்த கைகளுக்கு மாவு கட்டு 'பரிசு'
மொபைல் போன்களை பறித்த கைகளுக்கு மாவு கட்டு 'பரிசு'
ADDED : ஏப் 02, 2025 07:03 AM

கோவை; மாநகரில் பல்வேறு பகுதிகளில் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். முன்னதாக, அவர்கள் தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில், கைகளில் 'எலும்பு முறிவு' ஏற்பட்டதால், மாவுக்கட்டு போடப்பட்டது.
கோவை மாநகரில் சமீப காலமாக செயின் பறிப்பு, மொபைல் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்த, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பொன்னையராஜபுரம், இடையர் வீதி ஆகிய பகுதிகளில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், போலீசார் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை பார்த்தவுடன் பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்றனர்.
அப்போது, சி.எம்.சி., காலனி பகுதியில், இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு, காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து தப்ப முயன்றனர். அப்போது, இருவரும் கீழே விழுந்து, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் அவர்களை, கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் செல்வபுரம் பகுதியை சேர்ந்த யுவராஜா பூபதி, 30, சதாம் உசேன், 25 என்பது தெரியவந்தது.
இருவரும் மது அருந்த பணமில்லாமல், சாலை ஓரத்தில் நடந்து செல்வோரிடம் இருந்து மொபைல், இருசக்கர வாகனங்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் சேர்ந்து தான், வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் வழிப்பறி செய்திருப்பது தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.