/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடிகளின் வாழ்வை சித்தரிக்கும் 'மலரும் தீயும்'
/
பழங்குடிகளின் வாழ்வை சித்தரிக்கும் 'மலரும் தீயும்'
பழங்குடிகளின் வாழ்வை சித்தரிக்கும் 'மலரும் தீயும்'
பழங்குடிகளின் வாழ்வை சித்தரிக்கும் 'மலரும் தீயும்'
ADDED : பிப் 24, 2024 12:08 AM

கோவை;கோவையில் புலம் தமிழ் இலக்கியப் பலகை அமைப்பு சார்பில் எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் எழுதிய 'மலரும் தீயும்' நுால் வெளியீட்டு விழா, மாரண்ண கவுடர் பள்ளி அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு புலவர் அப்பாவு தலைமை வகித்தார். நுாலை அறிமுகம் செய்த கவிஞர் பூ.அ.ரவிந்திரன் பேசியதாவது:
எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியம், சாயத்திரை என்ற நாவல் மூலம் திருப்பூரின் சுற்றுச்சூழலையும், சாயத்தொழிலால் மாசடையும் மண்ணையும், நீரையும் பற்றி பதிவு செய்திருந்தார்.
இப்போது, 1000 பக்கங்களில் 'சிலுவை' என்ற மிக முக்கியமான நாவலை எழுதி இருக்கிறார். அதற்கு அடுத்ததாக, 'மலரும் தீயும்' என்ற இந்த நாவல் வெளி வந்துள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் வாழும், பழங்குடி மக்களின் வாழ்வியலை இந்த நாவலில் பதிவு செய்து இருக்கிறார். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த, பூர்வீக நிலங்களை விட்டு பழங்குடி மக்கள் வெளியேற்றப்படும் போது, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், இழப்புகள், வலிகள் இந்த நாவலில் வெளிப்படுகின்றன.
இவ்வாறு, அவர் பேசினார். நுாலாசிரியர் சுப்ரபாரதிமணியன் ஏற்புரையாற்றினார்.