/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உச்சம் தொட்டது பூக்கள் விலை மல்லிகை ரூ.3,500க்கு விற்பனை
/
உச்சம் தொட்டது பூக்கள் விலை மல்லிகை ரூ.3,500க்கு விற்பனை
உச்சம் தொட்டது பூக்கள் விலை மல்லிகை ரூ.3,500க்கு விற்பனை
உச்சம் தொட்டது பூக்கள் விலை மல்லிகை ரூ.3,500க்கு விற்பனை
ADDED : ஜன 01, 2025 05:19 AM

கோவை : வரத்து கணிசமாக குறைந்துள்ளதால், கோவையில் அனைத்து வகை பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகை நேற்று ஒரு கிலோ, 3500 முதல் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
கோவை சந்தைக்கு, சத்தியமங்கலம், காரமடை, நிலக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. சீசன் இல்லாததாலும், பனிப்பொழிவு காரணமாகவும், வரத்து குறைந்துள்ளது.
அதன்படி, சாதாரணமாக கிலோ 600 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை, கடந்த டிசம்பர் இரண்டு, மூன்றாம் வாரத்தில் 1600 - 2000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மேலும் உயர்ந்து, 3500 - 4000 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது.
முல்லை, 1600 முதல் 2000 ரூபாய் வரையும், ஜாதிமல்லி 1600 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 250 - 300 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 - 240 ரூபாய்க்கும், அரளி 350 - 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோவை மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் துரை கூறுகையில், ''மொத்த பூக்கள், 10 டன் என்றால், வழக்கமாக மல்லி, முல்லை தினந்தோறும் 3 - 4 டன் வரத்து இருக்கும். தற்போது மொத்தமாகவே, மல்லிகை 100 கிலோ கூட வருவதில்லை.
மல்லிகை வருவது மிகவும் குறைவு என்பதால், 3500 முதல் நல்ல தரமான மல்லிகை 4000 ரூபாய் வரை கூட, விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ கிடைப்பதில்லை,'' என்றார்.

