/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓணம் பண்டிகைக்கு பூ விற்பனை விறுவிறு
/
ஓணம் பண்டிகைக்கு பூ விற்பனை விறுவிறு
ADDED : செப் 04, 2025 10:59 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
கேரள எல்லை நகரமான பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், திருவோணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பண்டிகைக்காக, அத்தப்பூ கோலமிடவும், வழிபாடு செய்யவும், சூடிக்கொள்ளவும் மக்கள் அதிகமாக பூக்கள் வாங்குகின்றனர்.
இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நேற்று பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
ஒரு கிலோ சம்பங்கி - 160 ரூபாய், செவ்வந்தி - 250, வெள்ளை செவ்வந்தி - 300, மல்லி - 600, முல்லை - 400, ஜாதிமல்லி - 500, நந்தியாவட்டம் - 500, பன்னீர் ரோஸ் - 120, சில்லி ரோஸ் - 250, மஞ்சள் ரோஸ் - 250, செண்டுமல்லி - 100, தாமரை ஒன்று, 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பூ வியாபாரிகள் கூறுகையில், 'ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கேரள மாநிலத்துக்கு அதிகளவில் பூக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களில், 12 டன் பூக்கள் கேரளாவுக்கு சென்றன. விற்பனையும் விறுவிறுப்பாக நடக்கிறது,' என்றனர்.