/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்
/
காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 25, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், மழை பெய்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காரமடை வட்டார சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'காரமடை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு கொசு ஒழிப்பு பணிகளும், காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன, என்றனர்.