ADDED : மார் 30, 2026 05:38 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை சுற்று வட்டார பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்பான தடுப்பு பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரமடை, மேட்டுப்பாளையத்தில் சுதாரத்துறையினர் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
காரமடை வட்டார சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''காரமடை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் தொடர்பாக தனியார், அரசு மருத்துவமனைகளில் இருந்து தகவல்கள் பெறப்படும். அதன் அடிப்படையில் நோயாளிகளின் இருப்பிட பகுதிகளுக்கு சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன,'' என்றனர்.
-----
