/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறக்கும் படை அதிரடி சோதனை; இதுவரை ரூ.1.51 கோடி பறிமுதல்
/
பறக்கும் படை அதிரடி சோதனை; இதுவரை ரூ.1.51 கோடி பறிமுதல்
பறக்கும் படை அதிரடி சோதனை; இதுவரை ரூ.1.51 கோடி பறிமுதல்
பறக்கும் படை அதிரடி சோதனை; இதுவரை ரூ.1.51 கோடி பறிமுதல்
ADDED : மார் 21, 2024 07:02 AM
கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பணிகளை கண்காணிக்க, 60 பறக்கும் படைகள், 60 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இக்குழுவினர், அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தில் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 360 டிகிரி கோணத்தில் சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது.
பறக்கும் படை வாகனங்கள், எந்தெந்த பகுதிகளில் பயணிக்கின்றன என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து, 'ரூட் சார்ட்'டை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யும் தொகை மற்றும் பரிசுப் பொருட்களை, உடனுக்குடன் அதற்குரிய செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த, 18ம் தேதி வரை, ஒரு கோடியே, 14 லட்சத்து, 69 ஆயிரத்து, 270 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் (19ம் தேதி), 37 லட்சத்து, 29 ஆயிரத்து, 730 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
19ம் தேதி வரை, ஒரு கோடியே, 51 லட்சத்து, 99 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

