ADDED : மார் 18, 2024 09:18 PM

சூலுார்;சூலுார் சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஏப்., 19 ம்தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. சூலுார் எம்.எல்.ஏ., அலுவலகம், சேர்மன் அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் அலுவலகம் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டன. அனைத்து பகுதியிலும், கட்சி கொடிகள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கட்சி அலுவலகங்கள், ஓட்டு சாவடிக்கு, 200 மீட்டருக்குள் இருந்தால், பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
தேர்தலை ஒட்டி, மாவட்டம் முழுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சூலுார் சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படையினர் தொகுதி முழுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்களை தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். உரிய ஆவணங்கள் உள்ளனவா என, ஆய்வு செய்கின்றனர். சுழற்சி முறையில் மூன்று பறக்கும் படையினர், மூன்று நிலையான கண்காணிப்பு படையினர் சூலுார், கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
