தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பறக்கும் படை சோதனை தீவிரம்; 15.65 லட்சம் ரூபாய் பறிமுதல்   

பறக்கும் படை சோதனை தீவிரம்; 15.65 லட்சம் ரூபாய் பறிமுதல்   

பறக்கும் படை சோதனை தீவிரம்; 15.65 லட்சம் ரூபாய் பறிமுதல்   


ADDED : மார் 20, 2024 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தொகுதியில், முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 15.65 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யும் பொருட்டு பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே, மாநில எல்லையொட்டிய கோபாலபுரம் சோதனைச் சாவடியில், துணை பி.டி.ஓ., வெண்ணிலா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த மிளகு வியாபாரி அம்பேபங்கிகோவிந்து என்பவரிடம், 15 லட்சம் ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மிளகு எடுத்துச் சென்று விற்பனை செய்து, தமிழகம் வழியாக செல்வது உறுதிசெய்யப்பட்டது. அதேநேரம், உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சப் -கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

* இதேபோன்று, வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆழியாறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, கிணத்துக்கடவை சேர்ந்த முருகன் என்பவர், காரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த, 65 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம், பொள்ளாச்சி சார்நிலை கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us