/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காற்றில் பறக்குது ஆர்.டி.ஓ. போட்ட உத்தரவு பஸ்சை நிறுத்தாமல் ஊழியர்கள் அலட்சியம்
/
காற்றில் பறக்குது ஆர்.டி.ஓ. போட்ட உத்தரவு பஸ்சை நிறுத்தாமல் ஊழியர்கள் அலட்சியம்
காற்றில் பறக்குது ஆர்.டி.ஓ. போட்ட உத்தரவு பஸ்சை நிறுத்தாமல் ஊழியர்கள் அலட்சியம்
காற்றில் பறக்குது ஆர்.டி.ஓ. போட்ட உத்தரவு பஸ்சை நிறுத்தாமல் ஊழியர்கள் அலட்சியம்
ADDED : டிச 11, 2025 05:13 AM
அன்னூர்: ஒரு குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில், பஸ்சை நிறுத்த கடந்த மூன்றாண்டுகளாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆர்.டி.ஓ., உத்தரவிட்டும், இன்னும் பஸ்சை நிறுத்த மறுத்து, வேகமாக கடந்து செல்கின்றனர் பஸ் ஊழியர்கள். அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, கால்கடுக்க நடந்து வருகின்றனர் பயணிகள்.
அன்னூரில், கோவை சாலையில், 1.5 கி.மீ., தொலைவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, புள்ளியியல் துறை, உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இப்பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன.
எனினும், கோவையில் இருந்து அன்னூர் வழியாக சத்தி செல்லும் பெரும்பாலான பஸ்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை. இதனால் கோவையிலிருந்து வருவோரும், அன்னூரில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்வோரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் ஆய்வு செய்தார்.
அரசு மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம், அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல அறிவுறுத்தினார்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'கோவையிலிருந்து அன்னூர் வரும்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தாததால், அன்னூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி 1.5 கி.மீ., தூரம் நடந்து வருகிறோம். ஆர்.டி.ஓ., எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தும் அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்.டி.ஓ., உத்தரவை மதிக்காமல், பஸ்சை இங்கு நிறுத்தாமல் இயக்குகின்றனர். மூன்றாண்டுகளாக போராடியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டு ம்' என்றனர்.

