/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிருஷ்ணா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
கிருஷ்ணா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : டிச 11, 2025 05:13 AM

போத்தனூர்: சுகுணாபுரத்திலுள்ள கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி டி எக்ஸ் எட்ஜ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமையில் நடந்தது.
ஒப்பந்தத்தில் கல்வி குழும தலைமை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சி.ஐ.ஐ. கோயம்புத்தூர் மண்டல முன்னாள் தலைவர் கணேஷ்குமார் பேசுகையில், நமது நாட்டில் சிறு, குறு துறைக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பது, வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். பொறியியல் பட்டதாரிகள் புதுமை சார்ந்த மனநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம், சி.ஐ.ஐ. யின் துணை இயக்குனர் ஜெனரல் சுஜித் ஹரிதாஸ், டிஎக்ஸ் எட்ஜ்-ன் முதன்மை ஆலோசகர் மதுவசந்தி உள்ளிட்டோர், இவ்வமைப்பின் நோக்கத்தை விளக்கினர்.
நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ-., துணை இயக்குனர் ஷிம்னா, கோயம்புத்துர் மண்டல நிர்வாக அதிகாரி சாய்சரண், முதல்வர் பொற்குமரன், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

