/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருந்தகங்களில் விதிமீறல்; பறக்கும்படை நடவடிக்கை
/
மருந்தகங்களில் விதிமீறல்; பறக்கும்படை நடவடிக்கை
ADDED : ஆக 20, 2025 09:44 PM
கோவை; தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மருந்து ஆய்வாளர்கள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டது. மாநில அளவில், 41 பறக்கும் படை அமைக்கப்பட்டது. இக்குழு உறுப்பினர்கள் அவர்கள் பணிபுரியும் மாவட்டங்கள் மட்டுமின்றி, வேறு மாவட்டங்களிலும் தி டீர் ஆய்வு மேற்கொள்வர்.
கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மாரி முத்து விடம் கேட்டபோது, ''கருக்கலைப்பு மருந்து வினியோகம் மற்றும் மனநிலை பாதிப்பு, போதைப்பழக்கத்தை ஏற்படுத்தும் வலி நிவாரணி மருந்துகள் விற்பனை குறித்து பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிப்பர். டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துச்சீட்டு இல்லாமல், இதுபோன்ற மருந்துகளை எக்காரணம் கொண்டும் விற்கக்கூடாது.
கடந்த மாதம், கோவையில் 10 மருந்தகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நான்கு மருந்தகங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது,'' என்றார்.