/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் கண்காணிப்புக்கு பறக்கும் படை அமைப்பு
/
இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் கண்காணிப்புக்கு பறக்கும் படை அமைப்பு
இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் கண்காணிப்புக்கு பறக்கும் படை அமைப்பு
இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் கண்காணிப்புக்கு பறக்கும் படை அமைப்பு
ADDED : மார் 27, 2025 11:42 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கவுள்ள நிலையில், 9,223 மாணவ, மாணவியர் எதிர்கொள்ள உள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம், 91 பள்ளிகள் உள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது.
தேர்வானது, காலை 10:00 மணி முதல் மதியம், 1:15 மணி வரை நடக்கிறது. அதன்படி, 4,461 மாணவர்கள், 4,522 மாணவியர், 240 தனித்தேர்வர்கள் என, 9,223 பேர் தேர்வை எழுதவும் உள்ளனர்.
இதற்காக, 50 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்வு நடக்கும்போது வெளியாட்கள் பள்ளி வளாகத்தினுள் வராமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மையங்களில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதிய எண்ணிக்கையில் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வில் ஒழுங்கீனங்களை தடுக்க, 38 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.
* உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் மொத்தமாக, 19 மையங்களில், 4,574 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுக்கு, ஐந்து வழித்தடங்களில், போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேல்நிலை பொதுத்தேர்வின் நிறைவில், பத்தாம் வகுப்பு தேர்வும் நடப்பதால், மையங்களில் அடிப்படை வசதிகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலைத் தேர்வு நடக்காத மையங்களில், பத்தாம் வகுப்பு தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19 மையங்களிலும், துறை அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், நிலையான பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.