/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏடிஸ்' கொசு ஒழிப்பில் கவனம்; அங்கன்வாடிகளில் துாய்மைப் பணி
/
'ஏடிஸ்' கொசு ஒழிப்பில் கவனம்; அங்கன்வாடிகளில் துாய்மைப் பணி
'ஏடிஸ்' கொசு ஒழிப்பில் கவனம்; அங்கன்வாடிகளில் துாய்மைப் பணி
'ஏடிஸ்' கொசு ஒழிப்பில் கவனம்; அங்கன்வாடிகளில் துாய்மைப் பணி
ADDED : ஆக 31, 2025 07:38 PM
பொள்ளாச்சி; மழையால், 'ஏடிஸ்' கொசு உற்பத்தியாவதை தடுக்க, அங்கன்வாடி மைய சுற்றுப்பகுதியை துாய்மையாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும், என, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 400க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக்கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது. தற்போது, தொடர்ந்து பெய்யும் மழையால், பல மையங்களில், ஈரமான தரைத்தளம், மழை நீர் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனை கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது: அவ்வப்போது, மழை பெய்வதால், அங்கன்வாடி மையங்களில் தண்ணீர் தேக்கமடையும். எனவே, கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வளாகத்துக்குள் புதர் மண்டி கிடந்தால், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு வாயிலாக சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வளாகத்தினுள் திறந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள், கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவைற்றை மூட வேண்டும். நீண்ட நாளாக பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை வெளியே ஊற்ற வேண்டும். 'ஏடிஸ்' கொசு உற்பத்தியாவதை தடுக்க, அங்கன்வாடி சுற்றுப்பகுதியை துாய்மையாக பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.