/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'திறன் மேம்பாட்டுடன் கற்றலில் கவனம் தேவை'
/
'திறன் மேம்பாட்டுடன் கற்றலில் கவனம் தேவை'
ADDED : ஜூலை 08, 2025 12:28 AM

கோவை; கற்பகம் நிகர்நிலைப் பல்கலையில் கலை, அறிவியல் துறை முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும், 'துளிர் 2025' விழா, கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்த குமார் தலைமையில் நடந்தது.
விழாவில், இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் தலைவர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''மாணவர்கள் திறன் மேம்பாட்டுடன் கூடிய, கற்றலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தாழ்வு மனப்பான்மையைக் கைவிட்டு, தன்னம்பிக்கையுடன் வெற்றிக்கான வாய்ப்புகளை அணுக வேண்டும்,'' என்றார்.
விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் முருகையா, துணைவேந்தர் (பொறுப்பு) சுப்பன் ரவி, ஆராய்ச்சிப் பிரிவு முதன்மையர் பார்த்தசாரதி, பதிவாளர் பிரதீப் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.