/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செய்முறை பொதுத்தேர்வுக்கு பயிற்சி 'ஆப்சென்ட்' மாணவர்கள் மீது கவனம்
/
செய்முறை பொதுத்தேர்வுக்கு பயிற்சி 'ஆப்சென்ட்' மாணவர்கள் மீது கவனம்
செய்முறை பொதுத்தேர்வுக்கு பயிற்சி 'ஆப்சென்ட்' மாணவர்கள் மீது கவனம்
செய்முறை பொதுத்தேர்வுக்கு பயிற்சி 'ஆப்சென்ட்' மாணவர்கள் மீது கவனம்
ADDED : ஜன 18, 2024 12:16 AM
கோவை : பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வுக்கு, இன்னும் மூன்று வாரங்களே இருப்பதால், ஆய்வகத்தில் பயிற்சி வழங்குவதோடு, அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 1ம் தேதி பொதுத்தேர்வு துவங்குகிறது. செய்முறை பாடங்களுக்கான தேர்வு, பிப்.,12ல் துவங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 30 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வு நடப்பதால், மாணவர்கள் இதில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களாவது பெற்றிருந்தால்தான், தேர்ச்சி பெற்றதாக குறிப்பிடப்படும்.
பள்ளிகளில் பாடவாரியாக, ஆய்வக பயிற்சி வழங்கி, மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'பொதுத்தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்குவதால், செய்முறை பகுதியில் 20, கருத்துரு பகுதியில் 15 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே, தேர்ச்சி அடைந்ததாக குறிப்பிடப்படும்.
செய்முறை பொதுத்தேர்வு, அடுத்த மாதம் துவங்கும் நிலையில், மாணவர்களுக்கு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது, தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிப்பதோடு, பொதுத்தேர்வில் முழு வருகைப்பதிவு, உறுதி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.