/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீவிர உறுப்பினர் சேர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்: பா.ஜ., நிர்வாகிகளுக்கு எச்.ராஜா அறிவுரை
/
தீவிர உறுப்பினர் சேர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்: பா.ஜ., நிர்வாகிகளுக்கு எச்.ராஜா அறிவுரை
தீவிர உறுப்பினர் சேர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்: பா.ஜ., நிர்வாகிகளுக்கு எச்.ராஜா அறிவுரை
தீவிர உறுப்பினர் சேர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்: பா.ஜ., நிர்வாகிகளுக்கு எச்.ராஜா அறிவுரை
ADDED : அக் 15, 2024 11:58 PM

அன்னுார் : தீவிர உறுப்பினர் சேர்ப்பில், கவனம் செலுத்த வேண்டும், என தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா அன்னூர் அருகே பேசினார்.
தமிழக பா.ஜ.,வில், உறுப்பினர் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடந்து வருகிறது. இது குறித்த பயிலரங்கம், அன்னுார் அருகே வாகராயம்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை வகித்து பேசுகையில், ''மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலூர் ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய கோவை வடக்கு மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர். மேலும் ஒரு வாரம் அவகாசம் தரும்படி, தலைமையிடம் கேட்டுள்ளோம்,'' என்றார்.
தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா பேசியதாவது:
ஒரு ஓட்டு சாவடி, ஒரு கிளையாக அறிவிக்கப்படுகிறது. ஒரு கிளையில், குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி சேர்க்கப்பட்டால் மட்டுமே அந்தக் கிளையில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க முடியும். 50 உறுப்பினர் சேர்க்கப்படாவிட்டால் கிளையில் அமைப்பாளர் மட்டுமே நியமிக்கப்படுவார். ஒரு ஒன்றியத்தில் குறைந்தது 50 சதவீதம் கிளைகளாவது தகுதி பெற்ற கிளைகளாக இருந்தால் மட்டுமே ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியும். இல்லாவிட்டால் ஒன்றிய அமைப்பாளர்தான் நியமிக்கப்படுவார். தீவிர உறுப்பினரானால் மட்டுமே ஒன்றிய பொறுப்புக்கு வர முடியும். எனவே தீவிர உறுப்பினர் சேர்ப்பில் இதை கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.