/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊடுபயிராக தீவனப்பயிர் வளர்க்கலாம்! கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு
/
ஊடுபயிராக தீவனப்பயிர் வளர்க்கலாம்! கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு
ஊடுபயிராக தீவனப்பயிர் வளர்க்கலாம்! கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு
ஊடுபயிராக தீவனப்பயிர் வளர்க்கலாம்! கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு
ADDED : செப் 05, 2025 09:45 PM

பொள்ளாச்சி, ; ஒருங்கிணைந்த தீவனப்பயிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊடுபயிராக தீவனப் பயிர் வளர்க்க, வட்டார அளவில் விவசாயிகளிடையே கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில், 84 ஆயிரம் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை, முறையாக வளர்க்க, கால்நடை வளர்ப்போருக்கு பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு திட்டப் பணிகளை கால்நடைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு, நெகமம், லட்சுமாபுரம், வேட்டைக்காரன்புதுார் கால்நடை மருந்தகங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. கால்நடைத்துறை கோட்ட உதவி இயக்குநர் சக்லாபாபு தலைமையில் உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் அருண், அபிநயா ஆகியோர் உரிய ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
கால்நடைத்துறையினர் கூறியதாவது:
கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் சொந்தமான, குத்தகை நிலத்தில் தீவனம் வளர்க்கின்றனர். ஒரே வகை பசுந்தீவனத்தை வளர்ப்பதால், தீவனப்பற்றாக் குறையுடன் கால்நடைகளுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆடு, மாடு வளர்ப்பில் பசுந்தீவன பயிர் மேலாண்மை செய்வது, கம்பு நேப்பியர், தீவன புல், வேலி மசால், அகத்தி ஆகிய சாகுபடி முறை, அதன் அவசியம் குறித்து விவரிக்கப்படுகிறது.
மேலும் கால்நடைகளுக்கு தாதுஉப்பு கலவை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஒரு ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.