/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமுறைகளை பின்பற்றி விபத்தை தவிர்ப்போம்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்
/
விதிமுறைகளை பின்பற்றி விபத்தை தவிர்ப்போம்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்
விதிமுறைகளை பின்பற்றி விபத்தை தவிர்ப்போம்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்
விதிமுறைகளை பின்பற்றி விபத்தை தவிர்ப்போம்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்
ADDED : பிப் 20, 2025 10:25 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்புவிதிமுறைகள் குறித்துவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி போக்குவரத்து போலீசார், எண்ணம் போல வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரி சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி காந்தி சிலை அருகே நடந்தது.
கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், கிழக்கு போலீஸ் எஸ்.ஐ., கவுதமன், எண்ணம் போல் அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் முன்னிலை வகித்தனர்.
அரசு கலை மற்றும் கல்லுாரி மாணவர்கள், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றுவதன் அவசியம்மற்றும் ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மவுன நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ெஹல்மெட் அணிவதால், விபத்து ஏற்பட்டாலும் பாதிப்பை தவிர்ப்பது; ஹெல்மெட் அணியாததால் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது.கல்லுாரியின் சாலை பாதுகாப்பு அமைப்பு பொறுப்பாளர் பேராசிரியர் ராஜராமன், போலீசார் பங்கேற்றனர்.
போலீசார் கூறுகையில், 'சாலை விபத்துகளை தவிர்க்க, வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மொபைல்போனில் பேசிய படி வாகனத்தை இயக்குவது, வாகனங்களில் அதிவேகம் போன்ற விதிமீறல்களால் உயிர் இழப்புகள் ஏற்படுவதால், குடும்பமே பாதிக்கப்படுகின்றன.
எனவே, இருசக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணிந்தும், காரில் செல்வோர் 'சீட் பெல்ட்' கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி சாலை விபத்துகளை தவிர்ப்போம்,' என்றனர்.