sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குப்பை  வண்டியில் உணவு வினியோகம்: துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு

/

 குப்பை  வண்டியில் உணவு வினியோகம்: துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு

 குப்பை  வண்டியில் உணவு வினியோகம்: துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு

 குப்பை  வண்டியில் உணவு வினியோகம்: துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு


ADDED : நவ 20, 2025 04:21 AM

Google News

ADDED : நவ 20, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: செம்மொழி பூங்காவில் துாய்மை பணி மேற்கொள்பவர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு வினியோகிப்பது, பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வம், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:

செம்மொழி பூங்காவை முதல்வர் திறந்துவைக்க உள்ள நிலையில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பூங்கா இடங்களில், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணியாளர்களுக்கான உணவு, கழிவுகளை ஏற்றி செல்லும் குப்பை வண்டியில் கொண்டு சென்று,மாநகராட்சி நிர்வாகம் வழங்கிவருவது வேதனைக்குரியது. இது மனிதாபிமானமற்ற செயல்; கண்டிக்கத்தக்கது. துாய்மை பணியாளர்களை மனிதராக மதிக்க வேண்டும். ஆனால், குப்பை வண்டியில் கொண்டு சென்று உணவு வழங்குவது, எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. தவறு செய்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us