/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெட்ரோ ரத்து அறிவிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மெட்ரோ ரத்து அறிவிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2025 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் ரத்து கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
நாட்டின் வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமான நகரம் கோவை. இங்கு மெட்ரோ ரயில் திட்டம் முக்கியமானது. கோவை, மதுரையை விட குறைந்த தகுதியுள்ள பிற மாநிலங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு, தமிழகத்துக்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

