/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 22ல் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்
/
வரும் 22ல் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்
வரும் 22ல் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்
வரும் 22ல் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : நவ 20, 2025 02:48 AM
கோவை: கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும், 22ம் தேதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட, 22 சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
சி றப்பு மருத்துவர்களால் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித் துள்ளது.