தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உணவு பதனிடல் ஹேக்கத்தான்; பட்டதாரிகளுக்கு அழைப்பு

 உணவு பதனிடல் ஹேக்கத்தான்; பட்டதாரிகளுக்கு அழைப்பு

 உணவு பதனிடல் ஹேக்கத்தான்; பட்டதாரிகளுக்கு அழைப்பு


ADDED : பிப் 17, 2026 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு உணவு பதனிடல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (டிஎன் அபெக்ஸ்) சார்பில், உணவு பதனிடல் தொழில்நுட்ப ஹேக்கத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்துக்கேற்ற உணவு பதனிடல் தொழில்நுட்ப ஹேக்கத்தானில், 30 வயதுக்கு உட்பட்ட இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 30 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் பங்கேற்கலாம். தனிநபர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

நவீன பதனிடும் முறை மற்றும் உணவின் ஆயுட்கால நீட்டிப்பு, ஜென் ஸீ உணவுத் தயாரிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து, புதுமையான சிப்பமிடல் மற்றும் பதனிடப்பட்ட உணவுகள், ஸ்மார்ட் மற்றும் தானியங்கி உணவு பதனிடும் முறை என்பன உள்ளிட்ட, கருப்பொருட்களில் தங்களின் கண்டுபிடிப்புகள், ஐடியாக்களை முன்வைக்கலாம்.

முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இறுதி தேதி மார்ச் 6. மேலும் விவரங்களுக்கு, டிஎன் அபெக்ஸ் இணையதளத்தைப் பார்வையிடலாம். தொடர்புக்கு: 81225 98840.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us