/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொண்டை கடலையிலும் செயற்கை நிறமி நடவடிக்கைக்கு தயாராகிறது உணவு பாதுகாப்புத்துறை

ADDED : டிச 08, 2025 05:25 AM
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று முதல் கடைகளில் வறுத்த வெள்ளை சுண்டல் (கொண்டைக்கடலை) மாதிரிகள், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு உத்தரவின் பேரில் சேகரிக்கப்படவுள்ளது.
வறுத்த வெள்ளை சுண்டலில், ஆரமைன் எனும் டெக்ஸ்டைல் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் கலப்பதாக, புகார் எழுந்துள்ளது. இந்நிறமிகள், மஞ்சள் நிறத்தையும், மொறுமொறுப்பு தன்மையும் அளிப்பதால், இதனை தயாரிப்பாளர்கள் கலந்து சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இந்தியாவில், ஊட்டச்சத்து உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்த, கொண்டைக்கடலையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர். இதுபோன்ற கெமிக்கல் கலப்புடன் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், விரைவில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து, எழுந்த புகாரில் நாடு முழுவதும், கடைகள், பேக்கரிகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படும் வறுத்த வெள்ளை சுண்டல் மாதிரிகளை எடுத்து, பரிசோதனை செய்து அறிக்கை, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க, தேசிய உணவு பாதுகாப்பு தர அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
''கொண்டைக்கடலையில் நிறமிகள் கலந்துள்ளதா என, ஆய்வுகள் துவங்கவுள்ளோம்,'' என, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தெரிவித்தார்.