/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவு பாதுகாப்பு அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்; லஞ்சம் கேட்டு மிரட்டிய விவகாரம்

ADDED : ஜூலை 30, 2025 09:27 PM
கோவை; கோவை சரவணம்பட்டி பகுதியில், மளிகை கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகாருக்கு உள்ளான, உணவு பாதுகாப்பு அலுவலர் ( எப்.எஸ்.ஓ.,) சக்திவேல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம், சரவணம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சக்திவேல் , அப்பகுதி சில்லரை வணிகர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இவர் லஞ்சம் கேட்டு மிரட்டியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கலெக்டர் அறிவுறுத்தலின் படி, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மாநில உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,' சம்பந்தப்பட்ட நபர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சரவணம்பட்டி எப்.எஸ்.ஓ..பொறுப்பு , பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது' என்றார்.