/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து: அத்யாயனா ஒட்டுமொத்த சாம்பியன்
/
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து: அத்யாயனா ஒட்டுமொத்த சாம்பியன்
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து: அத்யாயனா ஒட்டுமொத்த சாம்பியன்
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து: அத்யாயனா ஒட்டுமொத்த சாம்பியன்
ADDED : ஜன 22, 2024 12:05 AM

கோவை;பள்ளி மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் அசத்தலாக விளையாடிய அத்யாயனா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளி சார்பில் பள்ளி மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஜன,. 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளி மைதானத்தில் நடந்தது.
இதில் 9, 11, 13 மற்றும் 15 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் நடந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 130 அணிகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற அணிகள்:மாணவர்கள்: ஒன்பது வயது பிரிவில் ஜி.ஆர்.டி., பள்ளி முதலிடம், அத்யாயனா பள்ளி இரண்டாமிடம்; 11 வயது பிரிவில் அத்யாயனா பள்ளி முதலிடம் ஜி.ஆர்.டி., இரண்டாமிடம் பிடித்தன.
மாணவியர் பிரிவு, ஒன்பது வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், பிரசித்தி வித்யாலயா முதலிடம், அத்யாயனா இரண்டாமிடம்; 11 வயது பிரிவில் அத்யாயனா முதலிடம், பிரசித்தி இரண்டாமிடம்; 13 வயது பிரிவில் மணி மேல்நிலைபள்ளி அணி முதலிடம், அத்யாயனா இரண்டாமிடம்; 15 வயது பிரிவில் பிரசித்தி பள்ளி முதலிடம், அத்யாயனா இரண்டாமிடம் பிடித்தன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அத்யாயனா பள்ளி தாளாளர் ஆனந்த் கிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.