/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்பந்து போட்டி : வியக்க வைத்த அணி வீரர்கள்
/
கால்பந்து போட்டி : வியக்க வைத்த அணி வீரர்கள்
ADDED : நவ 05, 2025 08:21 PM
கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கான கால்பந்து போட்டி, பச்சாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில் நேற்று துவங்கியது.
கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ் துவக்கி வைத்தார். மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. மாணவியர் 17 வயதுக்கு உட்பட்ட இறுதிப் போட்டியில், கலைவாணி மற்றும் புனித அந்தோணியார் பள்ளி அணிகள் மோதின.
கலைவாணி அணி வென்றது. மாணவியர் 19 வயதுக்கு உட்பட்ட இறுதிப் போட்டியில், விவேக் பள்ளி அணி, மணி மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதின. இதில், விவேக் பள்ளி அணி வெற்றி பெற்றது.
போட்டி ஏற்பாடுகளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் வேலுசாமி மேற்கொண்டார்.

