/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவ, மாணவியருக்கு கால்பந்து அணி தேர்வு போட்டி
/
பள்ளி மாணவ, மாணவியருக்கு கால்பந்து அணி தேர்வு போட்டி
பள்ளி மாணவ, மாணவியருக்கு கால்பந்து அணி தேர்வு போட்டி
பள்ளி மாணவ, மாணவியருக்கு கால்பந்து அணி தேர்வு போட்டி
ADDED : செப் 07, 2025 09:35 PM
கோவை; இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.,) நடத்தும் மண்டல அளவிலான, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கால்பந்து அணிக்கான தேர்வு போட்டி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை(9ம் தேதி) நடக்கிறது.
இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் காலை, 8:00 மணி முதல் நடக்கும் தேர்வு போட்டியில் பங்கேற்கலாம். 2025-26ம் கல்வியாண்டுக்கான கால்பந்து போட்டிக்கு மண்டல அளவில் தேர்வு நடக்கிறது. அந்தந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் அனைத்து வகை பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பி, மாணவ, மாணவியர் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.