/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலாம்பூரில் நடை மேம்பாலம்; அதிகாரிகளுடன் எம்.பி., ஆய்வு
/
நீலாம்பூரில் நடை மேம்பாலம்; அதிகாரிகளுடன் எம்.பி., ஆய்வு
நீலாம்பூரில் நடை மேம்பாலம்; அதிகாரிகளுடன் எம்.பி., ஆய்வு
நீலாம்பூரில் நடை மேம்பாலம்; அதிகாரிகளுடன் எம்.பி., ஆய்வு
ADDED : ஜூன் 12, 2025 11:45 PM

கோவை; சேலத்தில் இருந்து கோவை வழியாக, கேரளா செல்லும் கொச்சின் சாலை, நீலாம்பூர் அருகே கடக்கிறது. நீலாம்பூரில் இருந்து பாலக்காடு ரோட்டில் மதுக்கரை வரை, 26.2 கி.மீ., துாரத்துக்கு எல் அண்டு டி நிறுவனத்தால் இரு வழிச்சாலை உருவாக்கப்பட்டது. இச்சாலை, ஏப்., 1 முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் வந்தது. இரு வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதனால், என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக, கோவை எம்.பி., ராஜ்குமார், நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான வழித்தடத்தில் நேற்று ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் செந்தில்குமார், என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.
நீலாம்பூர் பகுதியில் பள்ளி, கல்லுாரிகள் அதிகமாக உள்ளதால், பி.எஸ்.ஜி., - ஐ.டி., கல்லுாரி முன், நெடுஞ்சாலையை கடப்பதற்கு உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்க வேண்டுமென, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கருத்துரு தயாரித்து, ஆணையத்தின் அனுமதி பெற்று விரைவில் அமைக்க, எம்.பி., அறிவுறுத்தினார்.
ரோட்டின் இருபுறமும் ஆங்காங்கே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருப்பது கண்டறியப்பட்டது. அக்கடைகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி, அவற்றை அகற்ற அறிவுறுத்தப்பட்டது.