sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நஞ்சப்பா ரோட்டில் நடைபாதை... காணவில்லை! கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு

/

 நஞ்சப்பா ரோட்டில் நடைபாதை... காணவில்லை! கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு

 நஞ்சப்பா ரோட்டில் நடைபாதை... காணவில்லை! கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு

 நஞ்சப்பா ரோட்டில் நடைபாதை... காணவில்லை! கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு

1


ADDED : ஜன 22, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: நஞ்சப்பா ரோட்டின் இருபுறமும் ஹார்டுவேர்ஸ் கடைகள் உள்ளன. பொருட்கள் வாங்க வருவோர் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர். வாகனங்கள் ரோட்டின் குறுக்கே நிறுத்தி, பொருட்களை ஏற்றி இறக்குவதால், போக்குவரத்து பாதிக்கிறது. நடைபாதை ஆக்கிரமிப்பால், பாத சாரிகள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடைகளுக்கு முன் வரிசையாக மரங்கள் இருக்கின்றன. கடைக்கும் மரங்களுக்கும் இடையே நடைபாதை உள்ளது. பாதையை ஆக்கிரமித்து, மின் மோட்டார், பிளாஸ்டிக் பைப், விவசாயப் பணிக்கான உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கடைக்காரர்கள் பரப்பி வைத்திருக்கின்றனர். நடைபாதை இருப்பதே தெரிவதில்லை.

கடைக்கு முன் வாகனம் நிறுத்தக் கூடாதென இரும்பு கிரில் மேடை வைக்கப்படுகிறது. அதனால், வாகனங்களை இஷ்டத்துக்கு நிறுத்தி செல்கின்றனர். இதனாலும் போக்குவரத்து பாதிக்கப் படுகிறது.

நடைபாதை ஆக்கிரமிப்பு, வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கியுள்ளது. நடைபாதையில் செல்ல வேண்டிய மக்கள், ஆக்கிரமிப்புகளால் ரோட்டில் நடந்து செல்கின்றனர். எதிர் திசையில் வரும் வாகனங்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரும் வேடிக்கை பார்க்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதால், அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் சுரங்கப் பாதை வழியாக வரும் வாகனங்கள், பார்க் கேட் ரவுண்டானாவை கடந்து செல்லும்போது, நெருக்கடியில் சிக்குகின்றன.

இதேபோல், பார்க் கேட் ரவுண்டானாவில் இருந்து உப்பிலிபாளையம் ரவுண்டானா நோக்கிச் செல்வோரும் ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. தினமும் வாகன ஓட்டிகள் அவஸ்தைப்படுகின்றனர்.

நடைபாதையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மீண்டும் ஆக்கிரமிப்பு உருவாகாமல் தடுக்க முடியும்.






      Dinamalar
      Follow us