/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் முதல் முறையாக அரசு பஸ்சில் பெண் கண்டக்டர்
/
வால்பாறையில் முதல் முறையாக அரசு பஸ்சில் பெண் கண்டக்டர்
வால்பாறையில் முதல் முறையாக அரசு பஸ்சில் பெண் கண்டக்டர்
வால்பாறையில் முதல் முறையாக அரசு பஸ்சில் பெண் கண்டக்டர்
ADDED : ஜூலை 02, 2025 09:49 PM

வால்பாறை; வால்பாறையில், அரசு போக்குவரத்துக்கழகத்தில் முதல் பெண் கண்டக்டராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வால்பாறை நகர் சிறுவர் பூங்காவை சேர்ந்தவர் கல்யாணி. இவர், ம.தி.மு.க., தொழிற்சங்க மாநில செயலாளராக உள்ளார். இவரது மகன் மாரிமுத்து வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தார். கடந்த, 2022ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, அவரது மனைவி மகேஸ்வரிக்கு, வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
அதன் அடிப்படையில், வால்பாறை அரசு போக்குவரத்துகழகத்தில் மகேஸ்வரி கண்டக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பி.ஏ., பட்டதாரியான இவர், வால்பாறை - இஞ்சிப்பாறை வழித்தடத்தில் கண்டக்டராக பணிபுரிகிறார்.
வால்பாறையில் முதல் பெண் கண்டக்டராக நியமிக்கபட்டுள்ளதால், அவருக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மகேஸ்வரி கூறியதாவது, ''எனது கணவர் இறந்ததால், வாரிசு அடிப்படையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. மே மாதம் 2ம் தேதி பணி உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 21 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்பின், மலைப்பகுதிலேயே பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பணியை சிறப்பாக மேற்கொள்வேன்,'' என்றார்.