/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டாய மதமாற்றம்; போலீசில் புகார்
/
கட்டாய மதமாற்றம்; போலீசில் புகார்
ADDED : மே 02, 2025 09:06 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் அரசுப்பள்ளி மாணவியை கட்டாய மத மாற்றம் செய்ய அழைத்துச் சென்றதாக தகவல் பரவியதையடுத்து, அந்த மாணவியின் பெற்றோர், ஹிந்து முன்னணி அமைப்பினர் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில், மாணவியின் தாய் புகார் கொடுத்தார். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ஊஞ்சவேலாம்பட்டி அருகே அரசு பள்ளியில் படிக்கும் எனது மகள், வளர் இளம் பெண்களுக்கான கூட்டம் மற்றும் 'டிசி' வாங்குவதற்காக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்ததால், பள்ளிக்கு சென்றார்.
அதன்பின், பள்ளிக்கு சென்று பார்த்த போது, எனது மகளை காணவில்லை. அங்கு இருந்தவர்களிடம் விசாரித்த போது, நர்ஸ் ஒருவர் சர்ச்சுக்கு அழைத்து சென்றதாக கூறினர்.
இதையடுத்து, உடுமலை ரோட்டில் உள்ள சர்ச்க்கு சென்று, மகளை மீட்டு வந்தேன். கட்டாய மதமாற்றத்துக்கு அழைத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.