/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி
/
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி
ADDED : நவ 25, 2025 06:00 AM
கோவை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வனம் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், 'வனமும் வாழ்வும்' எனும் தலைப்பில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 25 தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர்களுக்கு, இருநாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில், வன வளங்களின் பாதுகாப்பு, கானுயிர் பாதுகாப்பு, மனித-வனவிலங்கு மோதல் மேலாண்மை, காட்டுத்தீ தடுப்பு மற்றும் மேலாண்மை, காட்டுயிர் கணக்கெடுப்பு போன்ற தலைப்புகளில், நிபுணர்கள் வழிகாட்டுகின்றனர்.
பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து தலா 20 மாணவர்க ளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி வழங்க உள்ளனர்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 500 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

