/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனம் மோதி மான் இறப்பு வனத்துறையினர் விசாரணை
/
வாகனம் மோதி மான் இறப்பு வனத்துறையினர் விசாரணை
ADDED : ஜன 22, 2025 10:57 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மான் அடிபட்டு இறந்தது குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, சந்தேகவுண்டன்பாளையத்தில் ரோட்டோரம் அடிபட்டு மான் இறந்து கிடப்பதாக, அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் ரோட்டோரம் அடிபட்டு கிடந்த மானின் உடலை மீட்டு, வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
வனச்சரகர் ஞானபாலமுருகன் கூறுகையில், ''வழி தவறி வந்த ஐந்து வயது மான், ரோட்டை கடக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டு இறந்துள்ளது. பிரேத பரிசோதனை செய்த பின், மான் உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.