/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்கவால் குரங்கு நடமாட்டம் வனத்துறையினர் 'அட்வைஸ்'
/
சிங்கவால் குரங்கு நடமாட்டம் வனத்துறையினர் 'அட்வைஸ்'
சிங்கவால் குரங்கு நடமாட்டம் வனத்துறையினர் 'அட்வைஸ்'
சிங்கவால் குரங்கு நடமாட்டம் வனத்துறையினர் 'அட்வைஸ்'
ADDED : ஜன 17, 2025 11:41 PM

வால்பாறை,; சிங்கவால் குரங்குகள் நடமாடும் ரோட்டில், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள புதுத்தோட்டம் எஸ்டேட், குரங்குமுடி எஸ்டேட், சின்கோனா (டான்டீ), அக்காமலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிங்கவால் குரங்குகள் நடமாடுகின்றன.
புதுத்தோட்டம் பகுதியில் சிங்கவால்குரங்குகள் அதிகம் உள்ளன. இவை ரோட்டில் துள்ளி விளையாடும் போது விபத்து ஏற்படாமல் இருக்க, வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஐந்து இடங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளது.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், ரோட்டில் உலா வரும் சிங்கவால் குரங்குகளை வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரிய வகை வனவிலங்குகளில் ஒன்றான சிங்கவால் குரங்குகளின் இனப்பெருக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதன் வாழ்விடத்தை விரிவுபடுத்தவும், வனத்தில் போதிய உணவு கிடைக்கவும் வனத்துறை சார்பில் போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுத்தோட்டம் ரோட்டில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் நடமாடுவதால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.