/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதரில் சிக்கிய இருவாச்சி பறவையை மீட்ட வனத்துறை
/
புதரில் சிக்கிய இருவாச்சி பறவையை மீட்ட வனத்துறை
ADDED : டிச 17, 2024 11:53 PM

தொண்டாமுத்தூர்; சென்னனூர் அருகே, புதரில் சிக்கியிருந்த இருவாச்சி பறவையை வனத்துறையினர் மீட்டு, சிகிச்சையளித்து கண்காணித்து வருகின்றனர்.
மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட, சென்னனூர் தண்ணீர் பந்தல் சாலை ஓரத்தில் உள்ள புதரில், நேற்றுமுன்தினம் இருவாச்சி பறவை சிக்கியிருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர், புதரில் சிக்கி, காயமடைந்து, பறக்க முடியாமல் இருந்த ஆண் இருவாச்சி பறவையை மீட்டனர். அதன்பின், கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள பறவைகள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வனத்துறை கால்நடை டாக்டர், இருவாச்சி பறவைக்கு சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, வனத்துறையினர் இருவாச்சி பறவையை கண்காணித்து வருகின்றனர்.