/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை யானை 'விசிட்' வனத்துறை திணறல்
/
ஒற்றை யானை 'விசிட்' வனத்துறை திணறல்
ADDED : டிச 26, 2024 10:32 PM

வால்பாறை, ; சோலையாறு பஜாரில் நள்ளிரவில் முகாமிட்ட ஒற்றை யானையால், தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.
வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக மாறியதால், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, வால்பாறை அடுத்துள்ள பெரியகல்லார், கெஜமுடி, வில்லோனி, நல்லமுடி, தோணிமுடி, அப்பர்பாரளை, சோலையாறு உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், சோலையாறு பஜார் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் உலா வந்த ஒற்றையானை, அங்குள்ள கடைகளில் உள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தியது. அதன்பின், பலா மரத்தையும், வாழையையும் உட்கொண்டது. இதனால், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
அதன்பின், தொழிலாளர்கள் திரண்டு சென்று யானையை ஒரு மணி நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாடுவதால், சேதங்களை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறுகின்றனர்.