/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வேண்டும்
/
வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வேண்டும்
வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வேண்டும்
வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வேண்டும்
ADDED : மார் 10, 2024 11:21 PM
மேட்டுப்பாளையம்:வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க, ஆதிவாசி மலைவாழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் பேசினார்.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு ஆதிவாசி காலனியில், மலைவாழ் மக்களின் வாழ்வாதார முன்னேற்ற திட்டத்தின் வாயிலாக, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் பேசியதாவது:
கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் காய்ந்த இலைகளும், புற்களும் சருகு போல் உள்ளன. புற்கள் நன்கு காய்ந்துள்ளதால், எளிதில் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது. எனவே காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க, ஆதிவாசிகள் மலைவாழ் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
வனப்பகுதி அருகே இலை, தழை மற்றும் காய்ந்த செடிகளுக்கு தீ வைக்க கூடாது. யாரேனும் வனப் பகுதி வழியாக பீடி, சிகரெட் குடித்துச் செல்வதை பார்த்தால், இப்பகுதியில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் கூற வேண்டும்.
வனப்பகுதி ஒட்டி வசிக்கும் குடும்பத்தினர், திறந்த வெளியில் சமையல் செய்ய கூடாது. வனவிலங்குகள், சந்தேகத்திற்கு இடமளிக்கும், ஆட்கள் நடமாட்டம் மற்றும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலைகள், வனம் மற்றும் மலைப்பகுதியில் அமைந்துள்ளன.
சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், மது பாட்டில்கள், காலியான பிளாஸ்டிக் பாட்டில்கள், வனப்பகுதியில் போடக்கூடாது. கல்லாற்றைக் கடந்து சிலர் வனப்பகுதிக்குள் செல்வதாக புகார்கள் வந்துள்ளன.
வனத்துறையினர் சோதனையின் போது, வனப்பகுதியில் இருப்பவர்களை பிடித்து, போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள். இவ்வாறு வனச்சரக அலுவலர் பேசினார்.

