ADDED : ஜூன் 05, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை வனச்சரக அலுவலர்கள், இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலராக பணியாற்றியவர் ஜோசப் ஸ்டாலின். இவர் காரமடை வனச்சரக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
காரமடை வனச்சரக அலுவலராக பணியாற்றியவர் திவ்யா. இவர் கோவை மாவட்ட வன விரிவாக்க கோட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
ஜோசப் ஸ்டாலின் காரமடை வனச்சரக அலுவலராகவும் திவ்யா, வன விரிவாக்க கோட்ட வனச்சரக அலுவலராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் ஊட்டி வடக்கு வனச்சரக அலுவலராக பணியாற்றிய சசிகுமார், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இவரும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலராக பொறுப்பேற்றார்.