/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்; வனத்துறையினர் அதிர்ச்சி
/
யானை சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்; வனத்துறையினர் அதிர்ச்சி
யானை சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்; வனத்துறையினர் அதிர்ச்சி
யானை சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்; வனத்துறையினர் அதிர்ச்சி
ADDED : மார் 21, 2025 04:44 AM

வால்பாறை : வால்பாறை அருகே, அதிரப்பள்ளி யானையின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டறியப்பட்டதால், கேரள மாநில வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுற்றுலா பயணியர் அதிக அளவில் இந்த வழித்தடத்தில் வருகின்றனர்.
இதனிடையே, அதிரப்பள்ளி ரோட்டில் சமீப காலமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்திலேயே யானைகள் ரோட்டில் முகாமிடுகின்றன.
இந்நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள தென்னந்தோப்பில் யானைகள் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவு இருப்பதாக, கேரள மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறையினர், யானை சாணத்தை ஆய்வு செய்த போது, அதில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் நாப்கின் இருப்பதை கண்டறிந்தனர். இதனால், யானைகளுக்கு செரிமாண பிரச்னை ஏற்படுவதோடு, உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. இது, கேரள வனத்துறையிரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு மட்டும் அதிரப்பள்ளியில், 15,531 கிலோ பிளாஸ்டிக் சேகரிப்பட்டது. திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கழிவுகள் கலப்பதால், நீர் மாசுபடுவதோடு, வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணியர் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது. தடையை மீறி கண்டறியப்பட்டதால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். எனவே, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணியர் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.