/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளை விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறையினர்
/
யானைகளை விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறையினர்
ADDED : நவ 27, 2024 09:43 PM

வால்பாறை; தொழிலாளர் வீடுகளை சேதப்படுத்தி வரும் யானைகளை, தடுக்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.
தமிழக கேரள எல்லையில் உள்ள வால்பாறையில், யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பருவ மழைக்கு பின் கேரளாவில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று வெள்ளமலை சோலைப்பாடி பகுதிக்குள் நுழைந்த யானைகள், தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தின.
ஒரே நேரத்தில், பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிடுவதால், யானையை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைக்கு பிடித்தமான வாழை, பலா, கொய்யா போன்றவற்றை பயிரிடுவதை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும். ரேஷன் அரிசி யானை விரும்பி உண்ணும் என்பதால், தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள ரேஷன் அரிசியை வாசம் வெளியில் வராதவாறு, மூட்டை கட்டி வைக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் யானை வந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.