/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முயற்சி
/
யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முயற்சி
யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முயற்சி
யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முயற்சி
ADDED : டிச 14, 2025 07:56 AM

அன்னூர்: பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் மூன்று ஆண் யானைகள் அடங்கிய யானை கூட்டம் கீரணத்தம் பகுதியில், டைடல் பார்க் அருகே சென்றன. வனத்துறையினர் அந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயற்சித்தனர். எனினும் யானைகள் தொடர்ந்து கிழக்கு நோக்கி சென்றன.
நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு, காட்டம்பட்டி குளம் வழியாக கணேசபுரம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பம்பாளையம், தொட்டியனூர் வழியாக காக்காபாளையம் சென்றது.
கோவை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் தலைமையில், வனச்சரக அலுவலர் திருமுருகன், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என, 60 பேர் பத்து வாகனங்களில் வந்து, யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதில் அதிவிரைவு படை வீரர்களும் இணைந்தனர்.