/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பணியாளர்களுக்கு வனக்கல்லுாரியில் பயிற்சி
/
வனப்பணியாளர்களுக்கு வனக்கல்லுாரியில் பயிற்சி
ADDED : ஜூலை 06, 2025 11:35 PM

மேட்டுப்பாளையம்; வனத்துறையினருக்கு தரமான நாற்றுகள் உற்பத்தி செய்வது குறித்து, வனக் கல்லுாரியில் இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழக வனத்துறை மற்றும் வேளாண் பல்கலை வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து, வனத்துறை பணியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
நவீன நாற்றங்கால், தொழில்நுட்பங்கள் மற்றும் தரமான நாற்றுகள் உற்பத்தி என்ற தலைப்பில் பயிற்சி நடந்தது.
திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி வன மண்டலத்திற்கு உட்பட்ட, 46 வன காவலர்கள் மற்றும் வனவர்கள் இதில் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி முதல்வர் நிஹார் ரஞ்சன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். துறை தலைவர் பாலசுப்ரமணியம், பேராசிரியர்கள் விஜயன், சிவப்பிரகாஷ், சிவக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். விதைகள் கையாளும் முறைகள், முக்கிய விதை நேர்த்தி செய்தல், தரமான மர நாற்றுகளை உற்பத்தி செய்தல் ஆகியவை குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தின் முன்னாள் துணை மேலாளர் வில்சன் கென்னடி, பேராசிரியர்கள் திலக், அய்யாசாமி ஆகியோர் நாற்றுகளை எவ்வாறு உற்பத்தி செய்து, நடவு செய்வது, மண்புழு உரம், உயிர் உரங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை குறித்து விளக்கி கூறினர்.
முடிவில் பயிற்சியில் பங்கேற்ற வனப் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.