/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெயர் பலகையை அகற்றாத மாஜி உள்ளாட்சி பிரதிநிதிகள்
/
பெயர் பலகையை அகற்றாத மாஜி உள்ளாட்சி பிரதிநிதிகள்
ADDED : ஏப் 01, 2025 10:09 PM
பொள்ளாச்சி,; தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டது. பொள்ளாச்சி கோட்டத்தில், ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2019, டிச., மாதம் தேர்தல் நடந்தது. அவர்களின் பதவிக்காலம், கடந்த, ஜன., 5ம் தேதியுடன் முடிந்தது.
அவ்வாறு இருந்தும், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் இன்றும், தங்களது வாகனங்களில் பதவிகளை பெரிதாக எழுதிக் கொண்டு வலம் வருகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
பதவிக்காலம் முடிந்த ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சில ஊராட்சி தலைவர்கள், இன்றும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும், தங்களது சொந்த வாகனங்களில், பதவிகளை எழுதிக் கொண்டும் வலம் வருகின்றனர். துறை ரீதியான அதிகாரிகள், கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

