/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழாவில் மலேஷியா 'மாஜி' அமைச்சர்
/
விநாயகர் சதுர்த்தி விழாவில் மலேஷியா 'மாஜி' அமைச்சர்
விநாயகர் சதுர்த்தி விழாவில் மலேஷியா 'மாஜி' அமைச்சர்
விநாயகர் சதுர்த்தி விழாவில் மலேஷியா 'மாஜி' அமைச்சர்
ADDED : ஆக 28, 2025 06:51 AM

பெ.நா.பாளையம்; கோவை அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், மலேஷியா முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன் பங்கேற்றார்.
மலேஷியா நாட்டின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்தவர் டத்தோ சரவணன். தற்போது, அந்நாட்டின் எம்.பி.,யாக உள்ளார்.
கோவை வந்திருந்த இவர், மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஹிந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார்.
சிறப்பு பூஜை நடத்தி, ஹிந்து முன்னணி நிர்வாகிகள், அவருக்கு பிரசாதங்களை வழங்கினர்.
டத்தோ சரவணன் கூறுகையில், ''விநாயகர் வழிபாட்டின் முக்கிய அம்சமே மக்கள், அன்றைய நாளில், இறைவனை பிரதிஷ்டை செய்து, நேரடியாக தரிசனம் செய்து, அவருடன் இணக்கத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வது தான். இத்தகைய விழாக்களில், ஏராளமான பொதுமக்கள், தங்களுக்குள் பிரசாதங்களை பகிர்ந்து கொள்வது, சமூக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.