தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் மேயர் மனு

 பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் மேயர் மனு

 பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் மேயர் மனு


ADDED : நவ 29, 2025 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சி முன்னாள் மேயர் கல்பனா, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் வந்து ஒரு புகார் மனு அளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது:

எனது கணவருக்கு சொந்தமான வீடு தொடர்பான வழக்கு ஒன்று, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த சொத்துக்கு சம்பந்தமில்லாதவரும், இவ்வழக்கின் எதிர்மனுதாரர் ஆன கோபால் என்பவர், ராமு என்கிற பட்டியலின பெண்ணை குடியமர்த்தியுள்ளார்.

நான் அந்த பெண்ணை சாதி பெயர் சொல்லி திட்டுவதாக கூறி, என் மீது பொய் புகார் அளித்துள்ளார்.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரோடு சேர்ந்து கொண்டு, எனக்கு எதிராக நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி, கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகின்றனர்.

இதில் வி.சி.க.,வை சேர்ந்த கோவை கிழக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால், ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டோம் என மிரட்டுகின்றனர். எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us