/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் மரணம்
/
முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் மரணம்
ADDED : நவ 09, 2024 12:40 AM

கோவை; ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் கோவை செல்வராஜ், 66. கடந்த, 1991-96 அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கோவை மேற்கு தொகுதி காங்., எம்.எல்.ஏ., வாக இருந்தார். காங்., கட்சியில் இருந்து அ.தி.மு.க.,வுக்குச் சென்றார். பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த அவர், 2022ல் தி.மு. க.,வுக்கு தாவினார். செய்தி தொடர்பு துணை செயலாளராக செயல்பட்டு வந்தார்.
இவருக்கு மனைவி, மூன்று மகன்கள். இரு மகன்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மற்றொரு மகனுக்கு நேற்று திருப்பதியில் திருமண வரவேற்புநிகழ்ச்சி நடந்தது. அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு, மணமக்கள் மற்றும் இரு வீட்டாரின் பெற்றோர் கோவை திரும்புவதற்கு, திருப்பதி மலையில் இருந்து காரில் இறங்கினர்.அப்போது, கோவை செல்வராஜ்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடல், கோவை கொண்டு வரப்படுகிறது. இன்று காலை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.