/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பன்னிமடை அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி
/
பன்னிமடை அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி
ADDED : மார் 23, 2025 11:23 PM
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே உள்ள பன்னிமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் கம்ப்யூட்டர் வழங்கினர்.
இப்பள்ளியில் கடந்த, 2002-03ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் பள்ளிக்கு நான்கு புதிய கம்ப்யூட்டர்களை வழங்கினர். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் உதவியுடன் விஜயகுமார், ராதாகிருஷ்ணன், ராகவன் அருள் செல்வம், கணேசன் ராமசாமி ஆகியோர் கம்ப்யூட்டர்களை பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் தேவசேனாவிடம் ஒப்படைத்தனர். விழாவில், முன்னாள் மாணவர்கள், தங்களுடைய பள்ளி காலத்தின் நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சித்ரா, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.